என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
`பிரதர்' படத்தின் அனவுன்ஸ்மண்ட் வீடியோ வெளியானது
- ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி , மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவி நாயகனாக நடித்த எந்த திரைப்படமும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. அவர் கடைசியாக சைரன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
ஜெயம் ரவி அதற்கடுத்து பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி , மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையை மேற்கொண்டுள்ளார்.
படத்தின் டிஜிட்டல் மட்டும் சாட்டிலைட் உரிமையை 37 கோடி ரூபாய் கொடுத்து ஜீ தமிழ் மற்றும் ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது. அதை வீடியோ மூலம் யூ டியூபில் வெளியிட்டனர். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.
திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.