search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரஜினிகாந்த் ஹோலி பண்டிகை கொண்டாடுவதன் பின்னணி ?
    X

    ரஜினிகாந்த் 'ஹோலி' பண்டிகை கொண்டாடுவதன் பின்னணி ?

    • ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா,சௌந்தர்யா,பேரக்குழந்தைகளுடன் வண்ணப்பொடிகளை தூவி 'ஹோலி' கொண்டாடிய புகைப்படங்களை சவுந்தர்யா பகிர்ந்துள்ளார்.
    • சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மகன்கள் வேத் மற்றும் வீர் ஆகியோருடன் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உற்சாக 'போஸ்' கொடுத்த புகைப்படம் மற்றும் "ஹேப்பி ஹோலி " என்று பதிவிட்டு உள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஹோலி- 2024 கொண்டாடினார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் உற்சாகமாக வண்ணப்பொடிகளை தூவி 'ஹோலி' கொண்டாடிய புகைப்படங்களை அவரது மகள் சவுந்தர்யா இணைய தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    1975- ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் சினிமா நடிகராக அறிமுகமான 'சிவாஜி ராவ் சினிமாவுக்காக 'ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டப்பட்டது இதே நாள் என்பதால் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு 'ஹோலி' பண்டிகை தினம் சிறப்பு வாய்ந்ததாகும்.




    'ஹோலி' கொண்டாட்ட புகைப்படங்களை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் 'பழம்பெரும் இயக்குனர்பாலசந்தர் 'தாத்தா' அவர்களை இந்த நேரத்தில் நாம் தவறவிட்டு உள்ளோம்"என குறிப்பிட்டு உள்ளார்.

    மேலும் சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் அவர்களது மகன்கள் வேத் மற்றும் வீர் ஆகியோருடன் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உற்சாக 'போஸ்' கொடுத்த புகைப்படம் மற்றும் "ஹேப்பி ஹோலி " என்று இதயம் மற்றும் எமோஜிகளை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரில் பிறந்தார்.அவருக்கு 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்று பெற்றோர் பெயர் சூட்டினர். பெங்களூருவில் முதலில் 'கண்டக்டர்' பணி செய்தார்.அதன்பின் நடிப்பு ஆர்வத்தில் அவர் சென்னைக்கு வந்தார்.

    1975- ம் ஆண்டு பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார்.




    ரஜினி பல ஆண்டுகளாக சினிமாவில் ஒரு வலிமையான அசைக்க முடியாத சக்தியாக உள்ளார். ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர்' படத்தில் நடித்தார்.

    இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×