என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![ரியோ ராஜ் நடித்த `ஸ்வீட்ஹார்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு ரியோ ராஜ் நடித்த `ஸ்வீட்ஹார்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு](https://media.maalaimalar.com/h-upload/2025/02/10/9155673-newproject-2025-02-10t160313824.webp)
ரியோ ராஜ் நடித்த `ஸ்வீட்ஹார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
- அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் ஹை ஆன் லவ் என்ற படங்களை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்தார். இந்த இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ரெஞ்சி பானிக்கர் தமிழில் நடிகராக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றூம் ஃபௌசி நடித்துள்ளனர்.
திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் நாளை வெளியாகவுள்ளது. பாடலிற்கு Awsum Kissa என தலைப்பு வைத்துள்ளனர்.
ஜோ திரைப்படத்தை தொடர்ந்து ரியோவிற்கு இப்படமும் வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Prepare to trip to some adutha level vibes with #AwsumKissa ?First Single from #Sweetheart with some #RealYuvanVibes ? Releasing tomorrow at 6PM ⏳#SweetheartFromMarch14Starring @rio_raj and @gopikaramesh_A Film by @SwineethSukumarA @thisisysr Musical#Yuvan183 pic.twitter.com/6cmMXvZWVZ
— YSR Films (@YSRfilms) February 10, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.