search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கார்த்தி நடித்த `மெய்யழகன் படத்தின் இசை வெளியானது
    X

    கார்த்தி நடித்த `மெய்யழகன்' படத்தின் இசை வெளியானது

    • படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைப்பெற்று வருகிறது
    • கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார்.

    அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை பிரேம் குமார் இயக்கியுள்ளார்.'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைப்பெற்று வருகிறது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தின் இடம் பெற்றுள்ள் பாடல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×