என் மலர்
சினிமா செய்திகள்

கடந்த காலம் என்றும் ஓயாது - த்ரிஷ்யம் 3 அப்டேட் கொடுத்த மோகன்லால்

- ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது த்ரிஷ்யம் திரைப்படம்.
- 2021 ஆம் ஆண்டு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது த்ரிஷ்யம் திரைப்படம். இப்படம் உலகம் முழுதும் உள்ள மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. திரைப்படம் பிற மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, சீன ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இப்படத்தை கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது. இப்படத்தையும் ஜீது ஜோசப் இயக்கி இருந்தார். இப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு த்ரிஷ்யம் 3 படத்தை குறித்து மோகன்லால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுக் குறித்த அவர் பகிர்ந்த புகைப்படத்தில் அவர் ஜீத்து ஜோசப் இடம் பெற்றுள்ளனர். புகைப்படத்திற்கு கடந்தகாலம் எப்பொழுதும் அமைதியாக இருக்காது என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.
The Past Never Stays SilentDrishyam 3 Confirmed!#Drishyam3 pic.twitter.com/xZ8R7N82un
— Mohanlal (@Mohanlal) February 20, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.