என் மலர்
சினிமா செய்திகள்
பிரதீப் நடித்துள்ள டிராகன் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வெளியானது
- டிராகன் படத்தின் முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
- லியான் ஜேம்ஸ் இசையில், விக்னேஷ் சிவன் வரிகளில், அனிருத் இப்பாடலை பாடியுள்ளார்.
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் டிராகன் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. முழுப் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விக்னேஷ் சிவன் வரிகளில், அனிருத் இப்பாடலை பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Dragon first single from tomorrow ♥️♥️ wildfire music by my brother @leon_james ???? pic.twitter.com/QO3l9Sicey
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) January 1, 2025