என் மலர்
சினிமா செய்திகள்
X
தேர்தல் வந்துட்டா மக்கள தான் நம்ம கும்புடனும் - நகைச்சுவையான குழந்தை முன்னேற்ற கழகம் படத்தின் டீசர் வெளியீடு
Byமாலை மலர்15 Dec 2024 6:56 PM IST
- யோகிபாபு அடுத்ததாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார்.
யோகிபாபு அடுத்ததாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார். படத்தின் முதல் பாடலான பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு சில வாரங்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.
பள்ளிக்கூடத்தில் சிறுவர்களுக்கு மத்தியில் நடக்கும் தேர்தலை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Next Story
×
X