என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![கவுண்டமணி நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் டிரெயிலர் வெளியானது கவுண்டமணி நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் டிரெயிலர் வெளியானது](https://media.maalaimalar.com/h-upload/2025/02/06/9011702-newproject-2025-02-06t202958252.webp)
கவுண்டமணி நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் டிரெயிலர் வெளியானது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒத்த ஓட்டு முத்தையா.
- இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது.
இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒத்த ஓட்டு முத்தையா. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பாக்யராஜ், பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கவுண்டமனி பேசியது இணையத்தில் அதிகமாக பரவியது.
10 வருடங்களுக்கு பிறகு கவுண்டமணி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது. குடி ஸ்டோரி பிக்சர்ஸ் மற்றும் சினி கிராஃப்ட் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படத்தின் இசையை சித்தார்த் விபின் மேற்கொண்டுள்ளார். திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.