என் மலர்
சினிமா செய்திகள்
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு வெளியீடு
- கற்றது தமிழ் மற்றும் பேரன்பு போன்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
- ராம் அடுத்ததாக ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் ராம். இலக்கிய பூர்வமான சினிமா எடுப்பதில் மிகவும் திறமையானவர். கற்றது தமிழ் மற்றும் பேரன்பு போன்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தியவர். இயக்குனர் ராம் அடுத்ததாக ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சூரி, நிவின் பாலி மற்றும் அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வருகிறது.
திரைப்படத்தின் டிரெய்லர் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் ராம் பறந்து போ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒரு பிடிவாதமாக இருக்கும் சிறுவனுக்கும் பணம் கஷ்டத்தில் இருக்கும் அவனது தந்தைக்கும் ஒரு பயணத்தின் போது இருவரும் சந்திக்கும் மனிதர்களின் மூலம் வாழ்க்கையை புரிந்துக் கொள்ளும் சூழல் ஏற்டுகிறது. இதனை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
படத்தில் கிரேஸ் ஆண்டனி , மிதுல் ரியான், அஞ்சலி ,மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை ஏகாம்பரம், படத்தொகுப்பை மதி மேற்கொள்கின்றனர். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ளார். படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது.
திரைப்படம் தற்பொழுது நடைப்பெற்று வரும் சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.