என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
ஜீவா - அர்ஜுன் நடித்த அகத்தியா படத்தின் டிரெய்லர் வெளியீடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- "அகத்தியா" படத்தினை பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.
- திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது
"ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் "அகத்தியா" படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா, அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்கிறார். திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலில் இண்டெர்நேஷனல் தயாரித்துள்ளது.
படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.
கற்பனை, திகில் மற்றும் நம் கலாச்சார பின்னணி ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு இப்படம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க உள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் ஒரு ஃபேண்டசி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.