என் மலர்
சினிமா செய்திகள்
ஜெயம் ரவியின் மிருதன் 2 படத்தை குறித்து வெளியான அப்டேட்
- 2016 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌதர் ராஜன் இயக்கத்தில் வெளியாகியது மிருதன் திரைப்படம் .
- மிருதன் 2 படப்பிடிப்பு பணிகள் 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌதர் ராஜன் இயக்கத்தில் வெளியாகியது மிருதன் திரைப்படம் . இப்படத்தில் ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இப்படம் சாம்பி அபோகாலிப்ஸ் கதைக்களத்தில் உருவாகிய முதல் திரைப்படமாகும், ஊரில் ஒரு விஷ திரவம் பரவியதால் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் சாம்பிகளாக மாற தொடங்குகின்றனர். படத்தின் இறுதியில் கதாநாயகனான ஜெயம் ரவியும் அந்த திரவத்தினால் பாதிக்கப்பட்டு சாம்பியாக மாறிடுவார்.
இவ்வாறு படத்தின் கதைக்களம் அமைந்து இருக்கும்.
இப்படத்தின் அடுத்த பாகம் எடுக்கபோவதாக 2016 ஆம் ஆண்டு தெரிவித்து இருந்தாலும். இப்பொழுது தான் அதற்கான ப்ரி ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். படப்பிடிப்பு பணிகள் 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் நடிக்கப் போகும் மற்ற நடிகர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எதிர் பார்க்கப்படுகிறது.
சக்தி சௌந்தர் ராஜன் இயக்குனருடன் ஜெயம் ரவி இணையும் மூன்றாவது திரைப்படமாகும். ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.