search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நிமிஷா சஜயன் அடுத்து நடிக்கும் தமிழ் படத்தை குறித்து அப்டேட்
    X

    நிமிஷா சஜயன் அடுத்து நடிக்கும் தமிழ் படத்தை குறித்து அப்டேட்

    • சித்தா படத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகை நிமிஷா சஜயன்.
    • சமீபத்தில் நடந்து முடிந்த சைமா விருது வழங்கும் விழாவில். சித்தா படத்திற்காக சிறந்த நடிகை விருதை வென்றார்

    சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகை நிமிஷா சஜயன்.

    தொடர்ந்து தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக பழங்குடி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

    சமீபத்தில் நடந்து முடிந்த சைமா விருது வழங்கும் விழாவில் சித்தா படத்திற்காக சிறந்த நடிகை விருதை வென்றார். அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்கலங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

    இந்நிலையில் நிமிஷா சஜயன் தேசிய விருது வென்ற திரைக்கதை எழுத்தாளரான சஞ்சீவ் பழூர் இயக்கும் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு என்ன விலை என தலைப்பிட்டுள்ளனர். சஞ்சீவ் இயக்கும் முதல் திரைப்படம் இதுவே.

    இதற்குமுன் சஞ்சீவ் ஃபஹ்த் ஃபாசில் நடிப்பில் வெளிவந்து மாநில அரசு விருதை வென்ற திரைப்படமான தொண்டி முத்தாலும் திரிக்சாக்ஷியும் படத்திற்கு திரைக்கதை எழுதியவராவர்.

    என்ன விலை திரைப்படம் தமிழில் உருவாகவுள்ளது. திரில்லர் திரைப்படமாக உருவாகவுள்ளது. நிமிஷா சஜயனுடன் கருணாஸ், ஒய்.ஜி மகேந்திரன், ரஜேந்திரன், விஜயலட்சுமி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை கமலாலய பிலிம்ஸ் தயாரிக்க, சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடந்த நிலையில். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    Next Story
    ×