search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மருதமலை படத்தில் விஜய், அஜித்: வாய்ப்பு நழுவியது எப்படி? - சுராஜ் ஓபன் - டாக்
    X

    'மருதமலை' படத்தில் விஜய், அஜித்: வாய்ப்பு நழுவியது எப்படி? - சுராஜ் ஓபன் - டாக்

    • அர்ஜுனுடன் தொடர்பு இருந்ததால் அவரிடம் சென்றேன். அவர் ஒப்புக்கொண்டதால் அதன்பின் 'மருதமலை' படம் உருவானது
    • நான் அஜித்திடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு 'ஸ்கிரிப்ட்' பிடித்திருந்தது

    1996-ம் ஆண்டில் சுந்தர் சி-யின் நகைச்சுவைத் திரைப்படமான உள்ளத்தை அள்ளித்தா மற்றும் மேட்டுக்குடி ஆகியவற்றில்உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சுராஜ். 1997-ம் ஆண்டில் ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் சுந்தர் சி-க்கு தொடர்ந்து உதவியதோடு ஜானகிராமன் படத்தின் இணை இயக்குனராகவும் இருந்தார்.

    பின்னர் இயக்குநர் சுந்தர் சி-யை வைத்து 2006-ல் தலைநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சுராஜ். 'அதன் பின் 'மருதமலை' படத்தை 2007-ல் சுராஜ் இயக்கினார். இப்படத்தில் அர்ஜுன், வடிவேலு, மீரா சோப்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.

    இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். 2009-ல், தனுஷ், தமன்னா நடித்த படிக்காதவன் படத்தை இயக்கினார். இந்நிலையில் தற்போது இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது :-



    மருதமலை படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தார். அவர் ஸ்கிரிப்டை ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் தொகையை வாங்கினார். இதில் நடித்திருந்தால் மருதமலையே அவரது முதல் போலீஸ் வேடமாக இருந்திருக்கும். ஆனால், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் "சச்சின்" படம் காரணமாக விஜய் இதிலிருந்து விலகினார்.

    இதற்கிடையில் நான் அஜித்திடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு 'ஸ்கிரிப்ட்' பிடித்திருந்தது. அவர் அதே நேரத்தில் "கிரீடம்"படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்ததாலும், வடிவேலுக்கு அப்போது அஜித்துடன் இந்த படத்தில் நடிக்க பிடிக்காததாலும் எங்களால் இந்த படத்தை தொடர முடியவில்லை.

    பிறகு நான், சுந்தர்.சி பணியாற்றிய "கிரி"படம் மூலம் அர்ஜுனுடன் தொடர்பு இருந்ததால் அவரிடம் சென்றேன். அவர் ஒப்புக்கொண்டதால் அதன்பின் 'மருதமலை' படம் உருவானது. உருவானது.அந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×