என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
தில் ராஜுடன் மீண்டும் இணைகிறார் விஜய் தேவரகொண்டா
- இவர் கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
- இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் தேவரகொண்டா அவரது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை.
அந்த வகையில் கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
அதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கௌதம் தினனுரி இயக்கி வருகிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் தேவரகொண்டா அவரது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். படக்குழுவினர் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதில் ஒரு ரத்தக்கறை படிந்த கை வாளை ஏந்தியபடி உள்ள காட்சிகள் அமைக்கபட்டுள்ளது.
இது ஒரு கிராமப்புற ஆக்ஷன் கதைக்களத்துடன் இருக்கும் படம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தை, ரவிகிரண் கோலா இயக்குகிறார். இதற்கு முன் ராஜா வாரு ராணி காரு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை தில் ராஜு சார்பாக ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இது தில் ராஜு தயாரிக்கும் 59 படமாகும்.
தில் ராஜூவுடன் விஜய் தேவரகொண்டா இணையும் இரண்டாவது படம் இதுவாகும். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.