என் மலர்
சினிமா செய்திகள்
ஜாமினில் வெளியே வந்த அல்லு அர்ஜுனை சந்தித்து ஆதரவு தெரிவித்த சக நடிகர்கள்
- நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
- உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலஜாமினில் அல்லு அர்ஜுன் இன்று சிறையிலிருந்து வெளியே வந்தார்.
அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் பார்க்க சென்றபோது, தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் (Local Court) 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.
#WATCH | Actor Vijay Deverakonda meets Actor Allu Arjun at the latter's residence in Jubilee Hills, Hyderabad. Allu Arjun was released from Chanchalguda Central Jail today after the Telangana High Court granted him interim bail yesterday on a personal bond of Rs 50,000 in… pic.twitter.com/MB2tpytfKL
— ANI (@ANI) December 14, 2024
அதனைத் தொடர்ந்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் உடனடியான ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 50 ஆயிரம் பிணையுடன் அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை சிறையில் இருந்து ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுன் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.
#ThandelRaju with ? #Puspha#AlluArjun #Nagachaitanya pic.twitter.com/FRzbHqa8xg
— NagaChaitanya_Fan❤️ (@chay_rohit_fan) December 14, 2024
அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இதனையடுத்து நடிகர்கள் ராணா டகுபதி, நாக சைதன்யா, உபேந்திர ராவ், விஜய் தேவரகொண்டா மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் ஆகியோர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
#Sukumar sir " We Love You " ♥️?@alluarjun #WeStandWithAlluArjun pic.twitter.com/7dntbknVZP
— Varvi G (@VarviG0) December 14, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.