என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
சூது கவ்வும் 2 படக்குழுவினரை வாழ்த்திய விஜய் சேதுபதி
- இந்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார். தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.
- படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் படம் வெளியானது. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. சூது கவ்வும் 2 என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.
படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி எப்பொழுதும் நல்ல இயக்குனர்களையும் , நல்ல படைப்புகளையும் பாராட்டுவது அவரின் இயல்பு. அதேப் போல் இயக்குனர் எம்.எஸ் அர்ஜூன் மற்றும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை நேற்று அவரது அலுவலகத்திற்கு சென்று படம் வெளியாவதையொட்டி வாழ்த்துகளை பெற்றனர்.
இயக்குனர் எம்.எஸ் அர்ஜூன் சூது கவ்வும் -2 படத்தின் முன்னோட்டத்தை விஜய் சேதுபதியிடம் காண்பித்து அது அவருக்கு பிடித்ததாக கூறியுள்ளார். படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.