என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![VIDEO: காந்தாரா படத்தில் வரும் ஜரந்தய தெய்வா கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் VIDEO: காந்தாரா படத்தில் வரும் ஜரந்தய தெய்வா கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9255016-vishal-kanthara.webp)
VIDEO: காந்தாரா படத்தில் வரும் ஜரந்தய தெய்வா கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காந்தார படத்தின் மூலமாக பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது.
- ஜரந்தய தெய்வா கோவிலில் விஷால் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது
கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா சேப்ட்டர் 1' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காந்தார படத்தின் மூலமாக கர்நாடகா & கேரளா மாநில எல்லைப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகளின் பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது.
இந்நிலையில், மங்களூரில் உள்ள ஜரந்தய தெய்வா பஞ்சுருளி கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
கர்நாடக மாநிலத்தில் ஜரந்தய தெய்வா கோவிலில் புரட்சி தளபதி விஷால் அவர்கள் வழிபாடு#kantara #karnadaka #manglore #pooja #godisgreat #godbless@VishalKOfficial @VISHAL_SFC @AIVishal_OFC @VishalFans24x7 pic.twitter.com/QMq1f6f4Yg
— Harikrishnan (@HariKr_official) February 12, 2025