என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நீங்கள்தான் BEST ஜோ சேச்சி - நிமிஷா சஜயன் நெகிழ்ச்சி
    X

    நீங்கள்தான் BEST ஜோ சேச்சி - நிமிஷா சஜயன் நெகிழ்ச்சி

    • ஜோதிகா `டப்பா கார்டல்’ என்ற நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் நடித்துள்ளார்.
    • இத்தொடர் கடந்த 28 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இரண்டு இந்தி திரைப்படங்கள் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் அடுத்ததாக ஜோதிகா `டப்பா கார்டல்' என்ற நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் நடித்துள்ளார். இவருடன் மலையாள நடிகை நிமிஷா சஜயன், ஷபானா ஆஸ்மி, ஷாலினி பாண்டெ, அஞ்சலி ஆனந்த் மற்றூம் கஜராஜ் ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரை ஹிதேஷ் பாட்டியா இயக்கியுள்ளார்.

    இக்கதை 5 இல்லத்து அரசிகள் டப்பா என்ற சாப்பாடு கொடுக்கும் டெலிவரி செர்விஸை செய்து வருகின்றனர். அதில் போதை பொருட்களை மறைத்து வைத்து டெலிவரி செய்கின்றனர். இதற்கு அடுத்து என்ன ஆனது? இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை பற்றி இத்தொடரின் கதை அமைந்துள்ளது. இத்தொடர் கடந்த 28 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் இத்தொடரில் நடிகை ஜோதிகாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நிமிஷா சஜயன். அதில் அவர் கூறியதாவது " "ஜோ சேச்சி. நான் சந்தித்ததிலேயே மிகவும் அன்பு கொண்டவர், பணிவானவர். நீங்கள் எனக்காக செய்த எதையும் மறக்கவே மாட்டேன். நீங்கள்தான் BEST. உங்களுக்கென எனது இதயத்தில் எப்போதும் தனியிடமுண்டு.

    MY WONDER WOMAN.." என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×