என் மலர்
சினிமா செய்திகள்

எங்கள் வாழ்க்கையில் வலிகளை மறக்கச் செய்தவர் யுவன் - கோபிகா ரமேஷ்

- யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஸ்வீட் ஹார்ட்’.
- வருகிற மார்ச் 14-ந் தேதி படம் திரைப்படம் வெளியாகிறது
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஸ்வீட் ஹார்ட்'. படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.
வருகிற மார்ச் 14-ந் தேதி படம் திரைக்கு வரும் நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகை கோபிகா ரமேஷ் பேசுகையில், "ஸ்வீட்ஹார்ட் எனக்கு மிகப் ஸ்பெஷலான படம். இது என்னுடைய முதல் தமிழ் படம். தமிழ் பெண்ணாக இல்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்பிற்கு நன்றி.
மலையாளத்தில் உள்ளவர்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் பேவரிட். எங்கள் வாழ்க்கையில் வலிகளை மறக்கச் செய்தவர் யுவன். அவர் தயாரிக்கும் இந்த படத்தில் நடித்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.
மனு என்ற கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும் நன்றி.
ரியோ ராஜ் திறமையானவர். சவுகரியமான சக நடிகர். அவருக்கும் வரிசையாக வெற்றிகள் காத்திருக்கிறது. இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் வருகிற 14-ந் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.