என் மலர்
OTT

`வணங்கான்' படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

- ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வந்தது.
- வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியாக அருண் விஜய் நடித்துள்ளார்.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் வணங்கான் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வந்தது.
சமீப காலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அருண் விஜய்க்கு இந்த படம் ஒரு மைல்கல். விக்ரம், சூர்யாவை போலவே அருண் விஜய்யிடம் இருந்தும் சிறப்பான ஒரு நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் பாலா.
வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியாக அபாரமாக நடித்திருக்கும் அருண் விஜய் பல இடங்களில் கலங்க வைத்திருக்கிறார்.
இவருடைய தங்கையாக நடித்திருக்கும் ரிதாவும், காதலியாக நடித்திருக்கும் நடிகை ரோஷினி பிரகாசும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளன.
கம்பீரமான காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனியும் நேர்மையான நீதிபதியாக மிஷ்கினும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் வணங்கான் திரைப்படம் பிப்ரவரி 21 முதல் TENTKOTTA என்ற ஸ்ட்ரீமிங் தளத்தில் திரையிடப்பட உள்ளது. திரையரங்க வெளியீட்டைத் தவறவிட்ட பார்வையாளர்கள் இப்போது தங்கள் வீடுகளில் இருந்தபடியே படத்தை ஆன்லைனில் பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.