search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வருண் சக்கரவர்த்தி இல்லாதது இன்னும் வருத்தமாகவே இருக்கிறது- ஸ்டீபன் பிளமிங்
    X

    வருண் சக்கரவர்த்தி இல்லாதது இன்னும் வருத்தமாகவே இருக்கிறது- ஸ்டீபன் பிளமிங்

    • ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.
    • பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இந்த தோல்விக்கு கொல்கத்தா அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காரணமாக இருந்தார் அவர் 4 ஓவர் வீசி 36 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ருதுராஜ் கெய்க்வாட், ரகானே ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றினார்.

    31 வயதான சென்னையை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கடந்த காலங்களில் சி.எஸ்.கே. அணி வீரர்களுக்கு வலை பயிற்சி பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

    2019-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.8.4 கோடிக்கு எடுத்தது. பின்னர் 2020-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை ரூ.4 கோடிக்கு வாங்கியது. வருண் சக்கரவர்த்தி இந்த சீசனில் இதுவரை 19 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஒட்டு மொத்தமாக 61 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்காதது இன்னும் வருத்தமாகவே இருக்கிறது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வருண் சக்கரவர்த்தி எங்கள் அணியின் வலை (நெட்) பயிற்சி பவுலராக சில காலங்களில் இருந்தார். அப்போது அவர் எங்களது பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பந்து வீசினார். தற்போது ஐ.பி.எல். போட்டியில் அவர் அபாரமாக பந்து வீசி வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.

    பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.

    இவ்வாறு ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

    Next Story
    ×