என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்- டிவில்லியர்ஸ் மீண்டும் வருத்தம்
- 3 டெஸ்டிலும் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- குடும்பம் தான் முதலில் முக்கியம். நாம் அனைவரும் அதை மதிக்க வேண்டும்.
ஜோகன்ஸ்பர்க்:
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தெரிவித்தது.
அதே நேரத்தில் விலகலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எஞ்சிய 3 டெஸ்டிலும் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விராட்கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும், ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிய அவரது நண்பருமான டிவில்லியர்ஸ் வெளியிட்டு இருந்தார்.
விராட்கோலியும், அனுஷ்கா சர்மாவும் 2-வது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாகவும், இதனால் தான் விராட்கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு டிவில்லியர்ஸ் அதை மறுத்து இருந்தார். நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என்றும், விராட் கோலி குறித்து தவறான தகவலை பகிர்ந்து விட்டதாகவும் கூறி வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில் 2-வது குழந்தை குறித்த தகவல் தொடர்பாக விராட் கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு டிவில்லியர்ஸ் மீண்டும் தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:-
எனது நண்பர் விராட் கோலி இன்னும் அணியில் இடம்பெறாத நிலையில் உள்ளார். அவருக்கு தகுதியான தனியுரிமையை வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். குடும்பம் தான் முதலில் முக்கியம். நாம் அனைவரும் அதை மதிக்க வேண்டும்.
எனது முந்தைய தகவலில் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இதற்காக விராட் கோலி குடும்பத்தினரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உறுதிப்படுத்தப்படாத தகவலை பகிர்ந்து கொண்டது சரியல்ல.
அவர் நலமுடன் இருக்கிறார் என்பது மட்டுமே எனக்கு தெரியும். அவர் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார். எனவே தான் முதல் 2 டெஸ்டில் விளையாடவில்லை. வேறு எதையும் நான் உறுப்படுத்தப் போவதில்லை. அவர் மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரை நன்றாக இருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறார்.
இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்