என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![முகமது சிராஜ் வீட்டில் விசேஷம்.. வருகை தந்த ஆர்சிபி வீரர்கள்.. வைரலாகும் புகைப்படம் முகமது சிராஜ் வீட்டில் விசேஷம்.. வருகை தந்த ஆர்சிபி வீரர்கள்.. வைரலாகும் புகைப்படம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/16/1882484-siraj.webp)
முகமது சிராஜ் வீட்டில் விசேஷம்.. வருகை தந்த ஆர்சிபி வீரர்கள்.. வைரலாகும் புகைப்படம்
![Gajendra Perumal Gajendra Perumal](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
- பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் 12 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஐதாரபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் உள்ள முகமது சிராஜ் புதிய வீட்டிற்கு விராட் கோலி உள்பட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் சென்றுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக போராடி வருகின்றன. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியாகியுள்ளன. இதைவிட குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. கடந்த சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், இரண்டிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் 12 போட்டிகளில் விளையாடி 42 ஓவர்கள் வீசி 327 ரன்கள் கொடுத்து 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் ஒரேயொரு முறை மட்டும் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதுவரையில் 77 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ் தற்போது வரையில் 78 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில், ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த சிராஜ், ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு விராட் கோலி உள்பட மற்ற ஆர்சிபி வீரர்கள் அணிவகுத்து சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Virat Kohli And RCB team visited Siraj New House Opening In Film Nagar Jubilee Hills , HYD ❤️?❤️❤️#ViratKohli #Siraj #RCB #RoyalChallengersBangalore #RCBvsSRH @mufaddal_vohra @CricCrazyJohns @imVkohli pic.twitter.com/8DOzAR56c6
— Tarak Anna || Anil ? (@AnilTarakianNTR) May 15, 2023