search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆதிசங்கரர் இயற்றிய நூல்கள்
    X

    ஆதிசங்கரர் இயற்றிய நூல்கள்

    • தன் பரம குரு கௌட பாதர் இயற்றிய மாண்டூக்ய காரிகாவிற்கு ஒரு விளக்க நூல் இயற்றியுள்ளார்.
    • உபநிஷத்துக்களில் உருவில் சிறியதாக விருப்பினும் ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்துள்ளது இது.

    ஆதிசங்கரர் ஸ்தோத்திரங்கள் மற்றும் வேதாந்த நூல்கள் ஏராளமாக ஏழுதிஉள்ளார்.

    முக்கிய தசோபநிஷத்துக்களுடன் ச்வேதாச்வதரோபநிஷத், ந்ருஸிம்ஹ பூர்வ தாபனியோபநிஷத், ந்ருஸிம்ஹோத்தர தாபனியோபநிஷத் இவற்றிற்கும் விளக்க உரை எழுதியுள்ளார்.

    தன் பரம குரு கௌட பாதர் இயற்றிய மாண்டூக்ய காரிகாவிற்கு ஒரு விளக்க நூல் இயற்றியுள்ளார்.

    உபநிஷத்துக்களில் உருவில் சிறியதாக விருப்பினும் ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்துள்ளது இது.

    உபநிஷத்தின் முக்கிய பாகத்தில் 12 வாக்கியங்கள் தான் இடம் பெறுகின்றது இது. பிரணவத்தின் பொருளையும் சக்தியையு-ம் விளக்குகிறது.

    இவற்றைத் தவிர வியாஸரின் ப்ரஹ்ம சூத்திரத்திற்கு அரிய விளக்க உரை எழுதியுள்ளார்.

    மஹாபாரதத்தில் வரும் (1) ஸனத் ஸ§ஜாதீயம், (2) பகவத்கீதை (3) விஷ்ணு ஸஹஸ்ர நாமம் இம்மூன்று நூல்களுக்கும் சங்கரர் பாஷ்யம் எழுதியுள்ளார்.

    விவேக சூடாமணி, உபதேச ஸாஹஸ்ரீ, ஆத்ம போதம் போன்ற பிரகரணக்ரந்தங்களையும் இயற்றியுள்ளார்.

    வேதாந்த தத்துவத்தை விளக்க பல க்ரந்தங்களை இயற்றியுள்ளார். இவ்வாறு ஸ்ரீ சங்கரர் மக்கள் அக்ஞான இருளிலிருந்து ஞான ஒளிபெற பரம உபகாரம் செய்துள்ளார்.

    Next Story
    ×