search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மயிலம் முருகன் ஆலயம் அமைப்பு
    X

    மயிலம் முருகன் ஆலயம் அமைப்பு

    • கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.
    • இவருடைய வாகனமாகிய மயில் வடக்கு நோக்கி இருக்கிறது.

    கோவிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கித்தான் இருக்கிறது.

    இது எப்போதும் அடைத்துக் கிடக்கும். எனவே தெற்கு கோபுர வாசல் வழியாகத்தான்கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

    உள்ளே நுழைந்ததும் விநாயகர் சந்நிதி உள்ளது.

    தெற்கு வளாகத்தில் விசாலாட்சி விஸ்வநாதர் இருக்கிறார்கள். இவர்களை பாலசித்தரை ஐக்கியப்படுத்திய கோலத்தில் காணலாம்.

    கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.

    இவருடைய வாகனமாகிய மயில் வடக்கு நோக்கி இருக்கிறது.

    இங்கு உற்சவ மூர்த்திகள் மூன்று உண்டு. வெளியே தென் பக்கத்தில் ஒரு மடம் இருக்கிறது.

    அதில் பால சித்தர் சிலையை காணலாம்.

    இங்கு பிரம்மமோற்சவக் காலம் பங்குனி மாதம். தைப்பூசப் பெருவிழாவும் உண்டு.

    பிரம்மோற்சவம் 5ஆம் நாளும் தைப்பூசத்திலும் முருகன், பெரிய தங்க மயில் வாகனத்தில் வீதி வலம் வருவார்.

    இவை இரண்டும் பக்தர்களுக்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    Next Story
    ×