search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சொக்கம்மாவாகிய பரமேஸ்வரியை ஆட்கொண்ட இறைவன்
    X

    சொக்கம்மாவாகிய பரமேஸ்வரியை ஆட்கொண்ட இறைவன்

    • சுவாமியோ! அப்படியே ஆகுக என்று திருவாய் மலர்ந்தார்.
    • பிறகு மேல் சன்னிதானத்திற்கு வருக என்று கூறினார்.

    செட்டியார், சுவாமி தங்களை அடைந்ததும் அகில உலக தேவியே மகளாகப் பெற்றும நான் அடைந்ததை காட்டிலும் வேறு பேறு எனக்கு என்ன வேண்டும்.

    ஆயினும் இவ்விடத்திலேயே உம்மை வந்தடைந்து தரிசனம் செய்யும் அன்பர்கட்கு "புத்திரப்பேறு, மாங்கல்யப்பேறு, செல்வப்பேறு, பினிநீக்கம் "என்று அவரவர் கோரியபடி வரத்தையும் அளித்தருள வேண்டுமென பிரார்த்தித்தார்.

    சுவாமியோ! அப்படியே ஆகுக என்று திருவாய் மலர்ந்தார்.

    பிறகு மேல் சன்னிதானத்திற்கு வருக என்று கூறினார்.

    அக்கட்டளையை ஏற்று வேதமலை உச்சியில் சென்று பார்க்க,அங்கும் அம்மையாரோடு காட்சி அளிக்க கண்ட தனக்கோட்டி செட்டியார் பேரானந்தம் கொண்டவராய் சுவாமி அப்பனே! வேதகிரி பெருமானே! அம்மயாரை விட்டு நீங்காச் செல்வம் வேண்டும் என பிரார்த்திக்க, பெருமான் அம்மையார் சன்னிதானத்திலேயே இருக்க மோட்சமளித்தார்.

    வணிகர்கோன் விதேக முக்தி அடைந்தார். அவ்வம்மையாரை வளர்த்த தாயகிய மங்கையர்கரசியாருக்கும் பெருமான் சாயுச்சிய பதவியளித்தார்.

    அந்த நாள் முதல் ஈசன் வேதகிரி பெருமான் கொடுத்த வரத்தின் வாக்குப்படி வேதமலையின் மேல் வடக்கு திசையில் அம்மையாரால் ஏற்பட்ட வரமாதலால் அம்மையார் பேரே விளங்க "திருமலை சொக்கம்மன்"ஆலயம் என்றாக்கி இருவரும் அங்கெழுந்தருளியிருந்து மெய்யன்போடு தம்மை வந்து அடைந்த அன்பர்களுக்கு "புத்திரப்பேறு, மாங்கல்யப்பேறு, செல்வப்பேறு, பினிநீக்கம் போன்ற பேறுகள் கொடுக்கப்பெற்றவர்கள் தாமடைந்த வரத்தை முன்னிட்டு தொட்டில் பிள்ளை, மாலை சாத்துதல், அபிஷேக அலங்கார அர்ச்சனை செய்கின்றனர்.

    பெருமான் தேவியரை ஏற்றுக்கொண்ட சுப தினமான பங்குனி உத்திர சுபவேளையில் வருஷம் பிரதி வருஷம் சுவாமி, அம்மனுக்கு மஹா அபிஷேக திருக்கல்யான மஹோத்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

    Next Story
    ×