search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    உமையவள் தவம் புரிந்த அமிர்தகலச நாதர் கோவில்
    X

    உமையவள் தவம் புரிந்த அமிர்தகலச நாதர் கோவில்

    • இன்றைக்கு இந்த திருத்தலம் சாக்கோட்டை என்று வழங்கப்பட்டு வருகிறது.
    • சுந்தரர் மிகவும் போற்றி பாடியிருக்கிற பெருமையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

    கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.

    இன்றைக்கு இந்த திருத்தலம் சாக்கோட்டை என்று வழங்கப்பட்டு வருகிறது.

    சுந்தரர் மிகவும் போற்றி பாடியிருக்கிற பெருமையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

    முன்னொரு காலத்தில் ஏராளமான இயற்கை வளம் பொருத்தி செழிப்பாக விளங்கியது.

    மாளிகை, கோட்டைச்சுவர் என்றெல்லாம் இந்த ஊரைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.

    இங்குள்ள சிவபெருமானுடைய கோவிலைச் சுற்றி மிக பலமான கோட்டை கட்டப்பட்டிருந்ததால் கோட்டைச் சிவன் கோவில் என்று வழங்கப்பட்டு வருகிறது.

    அமிர்த கலசத்தின் நடுப்பகுதி இங்கு தங்கியதால் கலயநல்லூர் என்ற பெயர் முதலில் ஏற்பட்டது.

    இந்த இடத்தில் பிரம்ம தேவர் தவம் இருந்து சிவபெருமானே வழிபட்டு வந்ததால் இந்த ஸ்தலத்திற்கு மற்றொரு பெருமையும் உண்டு.

    உமையவளே இங்கு வந்து கடுந்தவம் புரிந்து உயிர்களைக் காக்க முயற்சித்ததோடு சிவபெருமானையும் விரும்பி அமர்ந்த இடம் என்று தனிச்சிறப்பும் பெற்றது.

    இறைவன் அமிர்தகலேஸ்வரர் என்றும், இறைவி அமிர்தவல்லி என்றும் வழங்கப்படுகின்றனர்.

    இங்குள்ள தீர்த்தத்திற்கு நால்வகைத் தீர்த்தம் என்று பெயர்.


    Next Story
    ×