search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வீட்டுக்குள் வரும் லட்சுமி
    X

    வீட்டுக்குள் வரும் லட்சுமி

    • கங்கா தேவிக்கும், மகாலட்சுமிக்கும் தாமதமாக வந்ததால் பசுவின் உடலில் இடமில்லாத நிலை ஏற்பட்டது. பசு அவர்கள் மீது இரக்கம் கொண்டது.
    • தன் பின் பகுதியைக் காட்டி, இந்த இரண்டு பாகங்களும்தான் காலியாக உள்ளன. நீங்கள் வேண்டுமானால் அங்கு குடியேறிக் கொள்ளலாம் என்று சொன்னது.

    உலகத்தைப் படைத்தபோது பிரம்மா பசுவையும் படைத்தார். அது மட்டுமின்றி பசுவின் உடலில் பதினான்கு உலகங்களையும், முப்பத்து முக்கோடி தேவர்களையும் இடம் பெறச் செய்தார்.

    எல்லாத் தேவர்களும் பசுவின் உடலில் இடம் பெற்றுவிட்ட நிலையில் கங்கா தேவிக்கும், மகாலட்சுமிக்கும் தாமதமாக வந்ததால் பசுவின் உடலில் இடமில்லாத நிலை ஏற்பட்டது. பசு அவர்கள் மீது இரக்கம் கொண்டது.

    தன் பின் பகுதியைக் காட்டி, இந்த இரண்டு பாகங்களும்தான் காலியாக உள்ளன. நீங்கள் வேண்டுமானால் அங்கு குடியேறிக் கொள்ளலாம் என்று சொன்னது.

    அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் அந்த இடத்தை ஏற்றுக்கொண்டனர்.

    அதனால்தான் நாம், பசுவின் முன் பாகத்தையோ, முகத்தையோ தொட்டு நம்முடைய கண்களில் பக்தி உணர்வுடன் ஒற்றிக்கொள்வதோடு கோமாதா வழிபாட்டை முடித்து கொள்வதில்லை.

    பசுவின் பின் பகுதியையும் தொட்டு இரண்டு கண்களிலும் பணிவுடன் ஒற்றிக்கொள்கிறோம்.

    அதனால்தான் சாணத்துக்கும், கோமியத்துக்கும் அவ்வளவு மரியாதையும் மதிப்பும் உள்ளது.

    பசு தரும் சாணத்தைத்தான் நாம் பெரும் புனிதப் பொருளாகக் கருதி அதிலிருந்து விபூதி தயாரித்து நம் உடம்பெங்கும் பூசி நோய்கள் அனைத்தையும் போக்கிக் கொள்கிறோம்.

    அதுபோல பசுவிடம் இருந்து நாம் பெறும் கோமியமும் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.

    Next Story
    ×