search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஏழைகள் மீது தீராத அன்பு செலுத்திய மகான்
    X

    ஏழைகள் மீது தீராத அன்பு செலுத்திய மகான்

    • எந்த சாதியைச் சேர்ந்தவர்களும், எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் வைணவத்தின் கதவுகள் திறந்தே உள்ளன.
    • வைணவத்தில் சேர்ந்தவர்கள் தமது பண்டைக் குலத்தை துறந்து தொண்டர் குலத்தினர் ஆகி விடுவார்கள்.

    மேல்கோட்டைக்கு அழைத்து வந்த ஏழை எளியவர்களில், கடையருக்கும் கடையராக் கருதப்படும் பஞ்சமர்களின் பகவத்தைங்கரியத்தை நினைவு கூர்ந்து ராமானுஜர் பெருமிதம் கொண்டார்.

    அந்த மக்கள் அனைவரையும் அழைத்து, நன்னெறிக் கோட்பாடுகளை உபதேசித்து வைணவர்கள் ஆக்கினார்.

    திருநாராயண சுவாமி கோவில், ஸ்ரீரங்கப் பட்டணத்திலும் பேலூரிலுமுள்ள பெருமாள் கோவில்கள் போன்ற எல்லா வைணவக் கோவில்களுக்குள்ளும் எல்லோரையும் போன்றே இவர்களும் சென்று இறைவழிபாடு செய்யலாம் என்றும், கோவிலுக்கு அருகில் வெட்டப்பட்ட குளத்தில் இருந்து நீர் எடுத்து வரலாம் என்றும் ராமானுஜர் அறிவித்தார்.

    தீண்டத்தகாதவர் என்று கருதப்பட்ட பஞ்சமர்களை மகாத்மா காந்தி "அரிஜன்", (விஷ்ணுவுக்குப் பிரியமானவர்கள்) என்று அழைத்தார்.

    ஆனால், 900 ஆண்டுகளுக்கு முன்னரே ராமானுஜர் அவர்களை "திருக்குலத்தார்" எனக் குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

    எந்த சாதியைச் சேர்ந்தவர்களும், எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் வைணவத்தின் கதவுகள் திறந்தே உள்ளன.

    வைணவத்தில் சேர்ந்தவர்கள் தமது பண்டைக் குலத்தை துறந்து தொண்டர் குலத்தினர் ஆகி விடுவார்கள்.

    இவ்விதம் வைணவராகி, தொண்டர் குலத்தைச் சேர்ந்தவர்களை, அவர்களுடைய பண்டைக் குலத்தைக் குறிப்பிட்டுப் பேசுவது மகாபாவம் ஆகும் என்றார் ராமானுஜர்.

    இவ்விதம் பழிப்பவர்களுக்கு அடுத்த ஜன்மத்திலோ அல்லது மரணத்திற்குப் பின்னரோ தண்டனை கிடைக்கும் என்பதில்லை, இந்த ஜன்மத்திலேயே, பழித்துக் கூறிய அதே இடத்தில் தண்டனை உடனே கிடைக்கும் என்று ராமானுஜர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×