search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அருள்மிகு விஜயசனபெருமாள் திருக்கோவில்
    X

    அருள்மிகு விஜயசனபெருமாள் திருக்கோவில்

    • ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.
    • திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம்பெற இறைவனைப் பிரார்த்திக்கலாம்.

    சுவாமி : விஜயசனபெருமாள்.

    அம்பாள் : வரகுணவல்லித்தாயர், வரகுண மங்கைத் தாயர்.

    தீர்த்தம் : அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரணி.

    விமானம் : விஜயகோடி.

    பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

    தல வரலாறு :

    முன்னோரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புன்னிய கோஷம் என்னும் அக்கிராகாரத்தில் "வேதவி" என்பவர் தன் மாதா, பிதா, குரு மூவருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆஸனதை என்னும் மந்திரத்தை ஜெபித்து தவமிருக்க எண்ணியிருக்கையில் அவனிடம் திருமால் கீழ் பிராமண வேடத்தில் வந்து ஆஸனதை மந்திரம் ஜெபிக்க வரணகுண மங்கை தான் சிறந்தது என்று கூற அவர் இங்கு வந்து கடுந்தவம் செய்து திருமாலின் அருள் பெற்று பரமபதம் அடைந்தார். ஆஸன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் "விஜயசானர்" என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானது.

    பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமேச மகரிஷிக்கும் சத்தியத்தால் கணவனின் உயிர் மீட்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும் அதர்மத்தையும், அக்கிரமத்தையும் சுட்டுப் பொசுக்கும் அக்கினி தேவனுக்கு காட்சியளித்த இடம், இம்மூவருக்கும் சத்தியத்திற்கு ஜெயம் அளிப்பவனாக, சத்திய நாராயணனாக ஆதிசேடன் குடைபிடிக்க சத்தி ஜெயவிஜயங்களை தன் ஆசனமாகக் கொண்டு விஜயாசனர் என்னும் திருநாமம் பெற்று வீற்றிருந்த திருக்கோலத்தில் பரமபத சேவை தந்தருளும் தலம். இத்திருப்பதியில் உயிர் நீத்தால் மோட்சம் கிட்டும் என ரோமேச முனிவர் கூறியுள்ளார்.

    நத்தம் என்று ‌சொன்னால்தான் பலருக்கு புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்‌த்தனைப்படி விஜயாசனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி ‌‌கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.

    நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.

    பிரார்த்தனை:

    திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம்பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கலாம்.

    நேர்த்திக்கடன்:

    பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

    நடைதிறப்பு : காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, நண்பகல் 1.00 மணி முதல் 6.00 மணி வரை.

    வழிகாட்டி:

    நெல்லை, திருச்செந்ததூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம், எனினும் வாடகைக் கார். அல்லது வேன் எடுத்து ‌‌‌கொள்வது நலம். இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து 13 கி.மீ., திரு‌‌நெல்வேலியிலிருந்து 29 கி.மீ.,

    அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.

    கோயில் முகவரி : அருள்மிகு விஜயசன பெருமாள் திருக்கோவில்,நந்தம், தூத்துக்குடி மாவட்டம்.

    Next Story
    ×