என் மலர்
வழிபாடு
சரல் நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருவிழா இன்று தொடங்குகிறது
- விழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடை வழங்குதல் நடக்கிறது.
- 25-ந்தேதி திருக்கல்யாண ஏடுவாசிப்பு நடக்கிறது.
சரல் நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருவிழா மற்றும் திரு ஏடுவாசிப்பு விழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு அய்யாவின் பக்தி பாடல்கள், காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, 9 மணிக்கு துவயல் தவசு, மாலை 5 மணிக்கு திருஏடுவாசிப்பு, இரவு 9.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை ஆகியவை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலையில் அய்யாவுக்கு பணிவிடை, மாலையில் திருஏடுவாசிப்பு, இரவு அய்யாவுக்கு பணிவிடை, தர்மம் வழங்குதல் நடக்கிறது. 25-ந்தேதி இரவு 9 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பு, இரவு 11 மணிக்கு பணிவிடை, 11.30 மணிக்கு இனிமம் வழங்குதல், 27-ந்தேதி பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, மதியம் 1 மணிக்கு அன்னதர்மம், இரவு 11 மணிக்கு நாராயணசாமி அலங்கார வாகனத்தில் பவனி வருதல், சிங்காரி மேளம், வாணவேடிக்கை ஆகியவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை சரல் நாராயணசாமி மற்றும் சிவசுடலைமாடசாமி கோவில்களின் ஊர் நிர்வாக கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.