search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சென்னையில் ஸ்ரீபத்மாவதி தாயாருக்கு தனிக்கோவில்
    X

    சென்னையில் ஸ்ரீபத்மாவதி தாயாருக்கு தனிக்கோவில்

    • சென்னையில் பத்மாவதி தாயாருக்குத் தனியாக ஒரு கோவில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
    • தாயார் சிலை 4½ அடி உயரம் 3 அைடி அகலம் கொண்டதாகும்.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதியைப் பற்றிக் குறிப்பிடும் போது, `இறை அருள் தானாகவே பூமிக்கு வந்து நிலைபெற்ற இடம்' என்று சொல்வார்கள். அத்தகைய பழைமையும் பெருமையும் உடையது திருமலை திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோவில். இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் தினமும் ஏழுமலையானைத் தரிசிக்கக் குவிந்து வருகின்றனர். எனவே பக்தர்களின் வசதிக்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு சேவைகளைத் தொடர்ந்து செய்துவருகிறது.

    திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு முறையான தகவல்களை அளிக்கவும் தரிசன மற்றும் சேவை சீட்டுகளைப் பெறவும் பல நகரங்களில் தரிசன தகவல் தொடர்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சேவை மையங்கள் உள்ளன.

    அதன் ஒரு பகுதியாக 2019-யில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை அருகில் கட்டப்பட்டுள்ள வேங்கடேசப் பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதற்கு விவேகானந்தா கேந்த்ராலயம் 5 ஏக்கர் நிலம் வழங்கிது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காகக் கோவில் திறந்து வைக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பாகத் திட்டமிடப்பட்டு 22.5 கோடி ரூபாய் செலவில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பு, இதன் வடிவம் திருமலை திருப்பதி கோவிலைப் போன்ற அமைப்பில் இருப்பதுதான். எனவே இங்குத் தரிசனம் செய்யும் பக்தர்கள் திருமலையில் தரிசனம் செய்த உணர்வினைப் பெறுவர்.

    தென் இந்தியாவில் வேங்கடாசலபதி என்று அழைக்கப்படும் பெருமாள், வட இந்தியாவில் `பாலாஜி' என்று பக்தியுடன் அழைக்கப்படுகிறார். குருசேத்திரத்தில் 34.6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருப்பதி வேங்கடாசலபதி கோவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் தற்போது தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து மகிழ்கின்றனர் விரைவில் அண்டை மாநிலமான தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரிலும் திருப்பதி கோவில் கட்டப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அசோக் சிங்கால், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த ஆண்டு திட்டமிட்டுள்ள மற்றும் செயல்படுத்தி வரும் திருப்பணிகள் குறித்துப் பேசினார்.

    சென்னையில் பத்மாவதி தாயாருக்குத் தனியாக ஒரு கோவில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. பத்மாவதி தாயாருக்கு ஆலயம் கட்ட நடிகை காஞ்சனா மற்றும் அவரது சகோதரி கிரிஷா பாண்டே 6 கிரவுண்டு நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.

    இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி 2021 பிப்ரவரியில் காஞ்சி காமக்கோடி சங்கராச்சாரியார், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, செயல் அலுவலர் ஹரி ஜவஹர் ஐ.ஏ.எஸ்., ஏ.ஜே. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆந்திரா அரசின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் தலா ஒரு பசு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 கோவில்களுக்கு பசுவும் கன்றும் வழங்கப்பட்டது.

    2010-ல் நடிகை காஞ்சனா அவரது சகோதரி கிரிஷா பாண்டே 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பத்மாவதி தாயார் கோவில் ரூ.10 கோடி செலவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. தேவஸ்தானம் சார்பில் ரூ.9 கோடியும், ராஜகோபுரம் ரூ.1.10 கோடியில் ஏ.ஜே.சேகர் சொந்த செலவில் கட்டப்பட்டுள்ளது.

    பத்மாவதி தாயார் சிலை திருப்பதி தேவஸ்தானம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான சிற்ப கலைஞர்கள் இந்த பணியை மேற்கொண்டனர். ஒரே கல்லில் தாயார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

    தாயார் சிலை 4½ அடி உயரம் 3 அைடி அகலம் கொண்டதாகும். சிலை வடிவமைக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜலவாசம், தானிய வாசம், நம்மூலிகை மற்றும் பாலிபிஷேகம் செய்து கருவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    தினமும் காலை, மதியம், மாலை மூன்று காலை பூஜைகள் நடத்தப்படும். தாயார் கருவறைக்கு பின்புறம், மடப்பள்ளியும், தாயார் அணியக்கூடிய அணிகலன்கள் வைப்பதற்கு தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. தாயார் கோவில் பஞ்சரத்தின ஆகம விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளது

    என தெரிவித்தார் ஏ.ஜே.சேகர் தலைவர் உள்ளூர் ஆலோசனை குழு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

    Next Story
    ×