என் மலர்
வழிபாடு

சென்னியாண்டவர் கோவிலில் திருக்கல்யாணம்
- சென்னியாண்டவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
- 5000-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற விராலிக் காடு சென்னியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசரி சென்னியாண்டவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண திருவிழா நடைபெற்றது.
அதனையொட்டி சென்னியாண்டவர் வள்ளி-தெய்வானையுடன் மயில் வாகனத்தில் திருமணக்கோலத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
இதே போல் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள கோவையின் பழனி என்று அழைக்கப்படும் முருக தலத்தில் கந்தசஷ்டி விழாவும் அதனை தொடர்ந்து நேற்று திருக்கல்யாண திருவிழாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளி-தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் வீற்றிருந்த முருகனை நீண்ட வரிசையில் நின்று தரிசித்து சென்றனர்.






