என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா
- கிறிஸ்து பிறப்பிற்கு பின் 30 மற்றும் 33 வருடத்தில் நடந்ததாக கருதப்படுகிறது.
- ஆங்கிலத்தில் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவை ஈஸ்டர் என்று அழைக்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் அதிமுக்கியமான திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படுவது இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா. இயேசு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஒரு விழா. இவ்விழா வருடத்தின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்து பிறப்பிற்கு பின் 30 மற்றும் 33 வருடத்தில் நடந்ததாக கருதப்படுகிறது.
இவ்வருடம் நாளை (9-ந்தேதி) இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா கிறிஸ்தவ பக்தி மார்க்கத்தின் மையமாக திகழ்கிறது. ஏனெனில் கிறிஸ்துவின் உயிர்ப்பு அவர் கடவுளின் மகன் என்பதையும், அவரை பின்பற்றி நடப்பவர்களுக்கு முடிவில்லா வாழ்வு உண்டு என்பதையும் நம்பிக்கையாக கிறிஸ்தவர்க ளுக்கு தந்துள்ளது. ஒரு மனிதன் வழியாக சாவு வந்தது போல ஒரு மனிதன் வழியாக இறந்தோர் உயிர்ப்பெறுவர் (1 கொரி 15:21, 22).
ஆங்கிலத்தில் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவை ஈஸ்டர் என்று அழைக்கிறார்கள். கிறிஸ்தவர்களின் பெரு விழாக்கள் பலதும் புற சமயத்தினர் பழக்க வழக்கங்களில் இருந்து தோன்றியது தான். அந்த வகையில் கிறிஸ்தவர்களின் நடுநாயகமாக விளங்கும் இந்த நிகழ்வும் அப்படி தோன்றினது தான். இடைக்காலத்தில் வாழ்ந்த வணக்கத்திற்குரிய பேடி (673-735) அடிகளாரால் இளவேனில் காலத்தின் கடவுளாக கொண்டாடப்பட்ட யோஸ்டர் என்ற தேவதையின் பெயரில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பெயர் தான் ஈஸ்டர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டது என்று அவரால் சொல்லப்பட்டது. இந்த விளக்கம் சிலருக்கு சந்தேகமாக இருந்தாலும், இதை விட சிறந்த விளக்கத்தை யாராலும் கொடுக்க முடியவில்லை.
கிறிஸ்துவின் உயிர்ப்பை யூதர்களின் பாஸ்கா பெருவிழாவோடு இணைத்து கூறப்படுகிறது. எகிப்தில் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்த இஸ்ரேயலருக்கு கடவுள் மீட்பு வழங்கினார். ஆண்டவர் கைவன்மையால் அடிமை வீடாகிய எகிப்திலிருந்து எம்மை வெளியேறச் செய்தார். (வி.ப 13:14) அதுபோல புதிய ஏற்பாடு காலத்தில் இயேசு சாவிலிருந்து புதிய விடுதலை பெற்றார்.
அழிவுக்குரியது அறியாமையையும், சாவுக்குரிய சாகமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதிய வாக்கு நிறைவேறும். சாவு முற்றிலும் ஒழிந்தது வெற்றி கிடைத்தது (1 கொரி 15:54).
இயேசுவின் உயிர்ப்பு, யூதர்களின் பாஸ்காவோடு ஒப்பிட்டு கூறப்படுவதின் காரணம், இயேசு பாஸ்கா பெருவிழாவின்போது தான் மரணத்திற்கு கையளிக்கப்பட்டார் என்பதாகும். அதுபோல பெரிய வியாழன் அன்று சீடர்களோடு இரவு உணவு அருந்தியது கிறிஸ்த வர்களின் நற்கருணைக்கு அடித்தளமாக அமைந்தது. இது இன்றும் யூதர்களின் பாஸ்கா பெருவிழாவின் தொடக்கத்தின் அடையாளமாக உள்ளது. இந்த உயிர்ப்பு பெருவிழாவும், யூதர்களின் பாஸ்கா பெருவிழாவும் இளவேனில் காலத்தில் கொண்டாடப்படுவது கிறிஸ்தவர்களின் மறுபிறப்பின் அடையாளமாகவும், ஆன்மீக வாழ்வின் அடித்தளமாகவும் அமையப் பெற்றுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்