search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பத்மநாப சுவாமி கோவிலுக்கு ஜி.எஸ்.டி. துறை நோட்டீசு
    X

    பத்மநாப சுவாமி கோவிலுக்கு ஜி.எஸ்.டி. துறை நோட்டீசு

    • பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்.
    • ரூ1.57 கோடி பாக்கியை செலுத்துமாறு நோட்டீஸ்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஆண்டுதோறும் வருவார்கள்.


    பத்மநாபசுவாமி கோவிலுக்கு கட்டிடங்கள், சிறப்பு பூஜைகள், யானை ஊர்வலத்துக்கான வாடகை, படங்கள்-உடைகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை என பல்வேறு வகைகளில் வருமானம் வருகிறது. அவற்றில் ஜி.எஸ்.டி.யின் கீழ் வரும் பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும்.

    ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ1.57கோடி ஜி.எஸ்.டி. வரி கட்டப்படாமல் இருப்பதாகவும், அதனை உடனடியாக கட்டவேண்டும் என்றும் ஜி.எஸ்.டி. துறை கேட்டுக்கொண்டது. ஆனால் அந்த நிலுவை தொகையை கோவில் நிர்வாகம் செலுத்தாமல் இருந்திருக்கிறது.

    ஆகவே நிலுவையாக உள்ள ரூ1.57 கோடியை உடனடியாக செலுத்துமாறு பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளைக்கு ஜி.எஸ்.டி. துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. அதற்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் விலக்கு உள்ள பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோவில் அதிகாரிகள் பதில் அனுப்பியுள்ளனர்.

    Next Story
    ×