என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
மாரியம்மன் வழிபாடு பிரார்த்தனை ஸ்லோகம்
- இருக்கன்குடி மாரியம்மனை வழிபடும் போது கீழ்க்கண்ட பிரார்த்தனையை சொல்லலாம்.
- இந்த பிரார்த்தனையை படித்தால் உங்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
இருக்கன்குடி மாரியம்மனை வழிபடும் போதோ, வழிபட்ட பிறகோ, கீழ்க்கண்ட பிரார்த்தனையை படித்தால் உங்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
தாமரை போன்ற அழகான முகத்தையும் மீன் போன்ற அழகான கண்களையும், பஞ்சு போன்றமென்மையான அழகிய பாதங்களையும், வெண்மையான அழகிய பல் வரிசைகளையும் கண்ணாரக் கண்டு மனப்பூர்வமாக உன்னைப் பணிய வேண்டுமானால் மேகம் போன்றகரிய அழகிய கூந்தலையுடைய மாரியம்மையே! நீ தான் அருள வேண்டும்.
விண்ணுலகைக் காக்கும் தலைவனான இந்திரனும் மற்றதேவர்களும் உன் அருகில் வந்து உன்னுடைய தாமரை போன்ற அழகிய பாதங்களை விரும்பித் துதிப்பார்கள். அதனால் அவர்கள் கண்ணியமாகிற மேம்பாட்டினைப் பெறுவார்கள். தேவர்களுக்கு நீ இவ்வாறு அருள் செய்வதால் கருணைக்கு நீ ஒருத்தியே! உனக்கு நிகர் வேறு யாருமில்லை. மாரிமுத்தே! இத்தகைய உன்னை நான் கண்டு தொழுவதற்காகவே நீ இவ்இருக்கன்குடி மண்ணில் தோன்றி பக்தர்களுக்குக் காட்சி தருகிறாய்.
இருக்கன்குடி மாரிமுத்தே! நீ கூர்மை நிறைந்த வேல் போன்ற கண் அழகுடைய பெண்களிடத்தில் வைக்கும் ஆசையை மாற்றுவாய்! பெரிய்யும்களவும் இவற்றால் உண்டாகும் கோபங்களும் ஆகிய குற்றங்களைப் போக்குவாய். மை பெரிருந்திய கண்களுடைய இருக்கன்குடித் தெய்வமே! தினமும் உன்னைக் கையாரக் கும்பிடுவோர்களது இடரை நீக்கிக் கருணை செய்வாய்.
ஒளி பெரிருந்திய பசுங்கொடி போன்ற இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே! கடல் அலைபோல ஓயாமல் வளர்ந்து பெருகும் எனது கொடூரமான பாபங்களைத் தீர்ப்பாயாக! அதற்காக காலை, மதியம், மாலை இம்முப்போதுகளிலும் என் முன் வந்து அருள் செய்ய வேணுமாய் வேண்டுகிறேன்.
மங்கையர் தலைவியே! இருக்கன்குடி மாரிமுத்தே! என் அருமைத் தாயே! குங்குமம் பூசப்பெற்ற தனங்களையுடைய கொடி போன்ற மெல்லிய உடல் அழகு வாய்ந்த பெண்களிடம் வைக்கும் ஆசை வழியாகப் புகுவான் எமதேவன். அதனால் இடையூறுகளை அடையும் பிறவியாகிற உடல் ஏற்படும். அதில் பிணி பிசி, மூப்பு என்ற துயர்கள் உண்டாகும். அத்துயரை சூரியனுக்கு எதிரில் பனி போவதுபோல அம்மே! நீ போக்கி அருள வேண்டுகிறேன்.
'பிறப்பு எடுத்தது பிறப்பை முடிப்பதற்காகவே என்று எண்ணாமல், மேலும்மேலும் பற்பல பிறப்புகளை எடுப்பதற்கு காரணமான வினைகளைச் செய்வதால் மாயாத மாயப் பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. இப்பிறவி நோயைத் தீர்த்துக் கொள்ள நிதி படைத்தவர்தான் தர்மங்கள் செய்து நல்ல வழி தேடிக் கொள்ளலாம். ஆனால் 'உலோபம் என்ற கருமித்தனத்தால் அவ்வாறு செய்வதில்லை. மனதால் கூட ஒரு சிறு பெரிருளையும் பிறருக்குக் கொடுக்க மாட்டாத உலோபியராய் வாழ்வர்.
அத்தகைய உலோபியரது செல்வம் அவருக்கு பயன்படாமல் அவரை விட்டுவிட்டு மாயமாய் மறைந்து போவது நீதிநூல் வழக்கு. அதுபோல என்னுடைய வினைகளும் என்னை விட்டு அகல்வதற்குத் தாயே! நீ அருள் செய்ய வேண்டும். மனம் சலியாமலும் உன்னுடைய அழகிய முகம் கோணாமலும் உனது வாயார ஒரு நன்மொழி கூறுவாயாக! அதாவது 'உன்பாவங்கள் கழியக் கடவுவதாக' என்று ஒரு அருள்மொழி கூறுவாயாக.
இருக்கன்குடியில் அமர்ந்தருளும் மாரிமுத்தே! வர்ணங்கள் நிறைந்த அழகிய பட்டாடை அணிந்திருப்பவளே! உன்னைத் தினமும் நூறு தடவை பணிந்து வழிபடுவேன். இவ்வாறு வேறு ஒரு தெய்வத்தையும் நான் பணிய மாட்டேன். இத்தகைய என்னைத் தந்தையும் தாயும் குழந்தைக்கு அருள் செய்வதுபோல் நீ எனக்கு இரக்கம் காட்டித் தினமும் என்முகம் பார்த்து அருள் தருவாயாக.
மத்த மலரையும், பிறையையும், சடையில் உடையவளே இருக்கன்குடியில் அமர்ந்திருக்கும் மாரிமுத்து! எத்தனையோ பல தலங்களில், 'மாரியம்மன்' என்னும் உன் திருநாமத்தின் புகழ் பரவியிருக்கிறது. அத்தலங்களில் போய் வழிபட்டாலும் அவ்வழி பட்டவர்களுக்கு இடர்கள் நீங்குவது இத்தலம் வந்து வழிபட்ட பிறகுதான். அருள் நிறைந்த இத்தலத்தில் வந்து பணிந்தவர்களுக்கே இடர் நீங்கும் என்றதால் இதன் பெருமைக்கு ஈடுவேறில்லை.
அழகிய உருவமுடையவளே! சிவபெருமானின் ஆசைக்கு உரியவளே! தினமும் உனது அழகிய பாதத் தாமரைகளை நினைந்து உருகிப் பக்தியுடன் வழிபடுவோர்களது துன்பங்களை நீக்கி இன்பத்தைக் கொடுப்பாய். அவ்வாறே எனக்கும் மனம் வைத்து அருள் செய்து என்னைக் காத்தருள வேண்டுகிறேன்.
உண்டவருக்கு வயிறு நிறைந்து பசி தீர்வதுபோல உன்னைக் காண வேணும் என்னும் பசியோடு வந்தவருக்கு உன்னைக் கண்டதும் மனநிறைவு உண்டாகும் என்னும் எண்ணத்தில் உன்னுடைய பக்தர்கள் மனம் கசிந்து உன்னைக் கொண்டாடிக் கும்பிடுவர். நீயும் அவர்கள் எண்ணுவது போல் அவர்களது துன்பங்களை அகற்றி அவர்களுக்கு இன்பமளிப்பாய். நீ மிகவும் மென்மையான தோற்றமுடையவள். வண்டுகள் விளையாடும் அழகிய சோலை சூழ்ந்த இருக்கன்குடியில் எழுந்தருளி இருக்கும் தேவியே! அருள் செய்வாய்.
வஞ்சனை செய்தும், உன்னை வணங்காதவருமான பாவியர்கள் அழிந்திட அவர்களது காடு போன்ற நெஞ்சைப் பிழிந்து குடலை மாலையாகச் சூடும் நிமலியாக விளங்குகிறாய். உன்னுடைய நல்ல பாதங்களைச் சிறிதும் மறவாத உன்னுடைய துன்பங்களை அகற்றுவாயாக. வஞ்சிக்கொடி போன்ற இடையை உடையவளே! இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே!
அம்பிகையே! மங்கள உருவமே! என் தாயே! இருக்கன்குடி மாரிமுத்தே! வானவர்கள் உனக்குச் சேவை செய்யநீ, சூரியனைப் போன்ற சூலத்தையும், வேம்பு இலையையும், தண்டத்தையும் அழகிய கைகளில் ஏந்தி சிங்க வாகனத்தில் அமர்ந்து என் முன்னே வருகை தந்து என்னைக் காத்தருள வேண்டுகிறேன்.
இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே! நெஞ்சால் நினைக்க வேண்டிய உன்னை நினையாமலும், இருகண்களாலும் பார்க்க வேண்டிய உன்னுடைய தாமரைப்பாதங்களைப் பாராமலும் இரு கைகளினால் உன்னைத் தஞ்சமென்று தலைமேல் கூப்பிக் கும்பிடாமலும் வறிதே திரியும் தீயவர்களுக்கு நீ வஞ்சகம் செய்பவளாய் இருக்கிறாய்.
இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே உன்னைத் தலையால் வணங்கியும், நாவால் துதித்தும் தலைமேல் கைகூப்பித் தொழுதும், நெஞ்சால் நினைந்தும் இவ்வாறு கசிந்துருகும் அடியவரது துயரை, அரத்தால் லயப் பெரிடியைச் சிந்துகிறது போலப் போக்கி நல்லவரமளித்து நீ அவரைக் காப்பாற்றுவளாயிருக்கிறாய்.
வாசம் கமழ்கின்றமாலையை அணிந்தவளே! இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே! பிறரை வஞ்சிக்கும் எண்ணத்துடன் பலப்பல வேடங்களைப் பூணும் அறிவிலிகளோடு நட்புக் கொண்டு அவர்களோடு திரியாமல் காப்பாற்றுவாய். உன்னைக் காண நினைந்தும், மனப்பூர்வமாக உன்னிடம் பக்தி கொண்டும் உன் திருவடிகளைத் துதிக்கும் அடியவர்கள் வேண்டும் வரங்களை அவர்களுக்கு நீ அருளுவாய்.
என் தாயே! இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே தாய் அபிராமியே! உன்னுடைய தாமரைப் பாதங்களையும் உன் சிரசில் விளங்கும் அழகிய பருத்த சடையையும், இனிமை பெரிருந்திய அமுதம் பெரிழியும் திருக்கண்களையும், விளங்குகின்ற திருக்கரங்களையும், காதில் பெரிருந்திய குண்டலத் தோடுகளையும் நான் காண்பதற்கு நீ கருணை செய்வாயாக.
பரமேஸ்வரியே! உன்னை வழிபட வல்லவர்க்கு உயிராய் இருப்பவளே! இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே! நான் என் வாழ்நாளில் நல்லாரைக் கண்டு உறவு செய்யாத பாபத்தையும், நீண்ட காலமாகப் பெரில்லாத பாவியர்களோடு உறவு செய்த பாபத்தையும் மற்றும் செய்த பாவங்களையும் பெரிறுத்து எனது துயரை நீக்கியருளுவாயாக.
வீண் பேச்சுப்பேசி உன்னைப் பணியாத முரடர்களைத் தீப்பந்தாக்கிக் கழு முனையில் ஏற்றுவாய். முப்புரமும் எரித்த தேவனின் தேவியே! நீ எனக்குத் தாயகம் என்று உன்னை நான் அடைந்தேன். நீ என்னுடைய வலிய பாபங்களை அகற்றுவாயாக! நீ மகா விஷ்ணுவான மாயவனுடைய தங்கையாகப் போற்றப்படுகிறாய். நீ எனக்குத் தாயாகவும் விளங்குகிறாய் இருக்கன்குடி மாரிமுத்தே!
''சுந்தரி, அபிராமி, அம்பிகை, சூலி'', என்று அரியும், நான் முகனும், மற்றும் பல தேவர்களும் உன்னருகில் வந்து உன்னை வாழ்த்துவார்கள். சுந்தரி! சூலி! வராகி! முக்கண்ணி! கவுரி! பல மந்திரரூபி! இருக்கன்குடி மாரிமுத்தே! நீ எனக்குத் தந்தையும் தாயுமாய் விளங்குகிறாய்.
இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே! நீ பூப்போன்ற அழகிய பாதங்களை உடையவள். மனக்குறை வில்லாதவள். காதைத் தொடும் மீன் போன்ற கண்ணழகையுடையவள். கடகத்தை அணிந்த கைகளை உடையவள். இத்தகைய நீ தெய்வமேயன்றி வேறில்லை. கருமையும் நீலமும் கலந்த நிறத்தையுடைய தாயே! என்னைக் காப்பாற்றுவாயாக. *
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்