search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இருமுடி கட்டி யாத்திரை- மறக்கக்கூடாதவை
    X

    இருமுடி கட்டி யாத்திரை- மறக்கக்கூடாதவை

    • இருமுடி இல்லாமல் 18 படி ஏறக்கூடாது.
    • மாலைகள் இருமுடி பைகள் ஆகியவையும் கடைகளில் கிடைக்கிறது.

    ஐயப்பனின் யாத்திரையில் இருமுடி கட்டி யாத்திரை தொடங்கி சென்று 18 படி ஏறுதல் என்பது தான் முக்கியச் சடங்காகும். இருமுடி இல்லாமல் 18 படி ஏறக்கூடாது. இருமுடியுடன் செல்பவர்களுக்கு தான் ஐயப்பனின் முழுமையான அனுக்கிரகம் கிடைக்கும். இருமுடிபை பச்சை, நீலம், கருப்பு ஏதாவது ஒரு நிறத்தில் இருக்கலாம், 3 அடி 1 அடி (அங்குலம்) அகலம் உள்ள துணிபை கடையில் விற்கிறார்கள் இதன் ஒரு மூலையில் இரு துணிகாது வைத்து அதில் 2 மீட்டர் நீளம் உள்ள நூற்கயிறு கட்டப்படும். இத்துடன் 8 இஞ்ச் நீளம், 5 இஞ்ச் அகலம் உள்ள இரண்டு துணிப்பபைகளும் நூல் கயிறு இணைத்து இருமுடி பை இருக்க வேண்டும்.

    இந்தப் கயிறு இணைத்து இருமுடி பை இருக்க வேண்டும். இந்தப் பைகளை இருமுடி கட்டும் அன்று கொண்டு வர வேண்டும். இருமுடியை முன்முடி பின்முடி என இரு பிரிவாக பிரித்து இரு முடிக்கட்டு கட்டுவார்கள். முன்முடி ஐயப்பனுக்கு பூஜைக் குரியது. பின்முடி சமையல் செய்வதற்கான சாமான்கள் வைக்கப்படுகிறது.

    முன்முடியில் 1) மஞ்சள் தூள் 2) மஞ்சள் 3) பன்னீர் 4) தேன் 5) சந்தன வில்லைகள் 6) குங்குமம் 7) விபூதி 8) ஊதுபத்தி 9) சாம்பிராணி 10) கற்பூரம் 11) பேரீட்சை 12) உலர்ந்த திராட்சை 13) முந்திரி 14) டைமன் கல்கண்டு 15) அச்சு வெல்லம் 16) அவல் 17) அவல்பொறி 18) மிளகு 19) கல் உப்பு 20) எலுமிச்சம் பழம் 21) வெற்றிலைபாக்கு 22) பாசிப் பருப்பு 23) சுக்கு 24) ஏலக்காய் 25) காணிப்பொன் 26) கருப்பு வளையல் 27) திரிநூல் 28) முத்திரை தேங்காய் ஒன்று 29) சிறிய தேங்காய் மூன்று 30) பச்சரிசி 31) பசு நெய்.

    தற்சமயம் கடைத்தெருவில் பூஜை சாமான்கள் கடைகளில் நமக்கு வேண்டியதற்கு ஏற்ப முன்முடி சாமான்களை பாக்கெட்டுகளில் போட்டு, தயாராக ரூ. 15 முதல் ரூ. 30 வரை ஒரு பாக்கெட் என விற்கிறார்கள். மாலைகள் இருமுடி பைகள் ஆகியவையும் கடைகளில் கிடைக்கிறது.

    மிகவும் ஆசார முறைப்படி பழைய சபரிமலை பயண வழிகளைக் கடைப்பிடிக்கும் குருசாமிகள் பெருவழிப்பாதையில் தாங்களே சமையல் செய்து அதற்கான பாத்திரங்களையும், மளிகை சாமான்களை யும் பயணம் வரும் சுவாமிகள் மூலம் கொண்டு செல்வர். அத்தகைய முறையில் சமையலுக்கு வேண்டிய மளிகை சாமான்கள் கொண்ட இரு முடிகளை ஒவ்வொரு இரு முடிக்கும் எண்கள் கொடுக்கப்பட்டால் அந்தந்த இருமுடியைப் பார்த்து எடுப்பது சுலபம். அவற்றை பின்முடியில் சுமக்கக் கூடிய அளவில் பிரித்து வைப்பார்கள். ஆனால் தற்சமயம் காட்டுவழியில் சமையல் செய்வது பெருமளவு குறைந்து விட்ட நிலையில் முன் முடி சாமான்களையே பிரித்து பின் முடியில் வைத்து விடுகின்றனர்.

    Next Story
    ×