என் மலர்
வழிபாடு

தேரோட்டம் நடந்ததையும், திரளான பக்தர்கள் கலந்துகொண்டதையும் படத்தில் காணலாம்.
கல்பாத்தியில் 3 கோவில்களின் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
- கடந்த 14-ந்தேதி முதல் நாள் தேரோட்டம் நடந்தது
- தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்று வந்தது.
பாலக்காடு அருகே கல்பாத்தி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி கோவில், கணபதி கோவில், சாந்தபுரம் பிரசன்ன விநாயகர் கோவில் ஆகிய 3 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் தேர்த்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி முதல் நாள் தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் 2-வது நாள் நாள் தேரோட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று 3-து நாள் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது. விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி கோவில், கணபதி கோவில், சாந்தபுரம் பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் 2 கோவில்களை சேர்ந்த தேர்கள் பக்தர்கள் வெள்ளத்தில் அணிவகுத்து வந்தன. கோவிலை ஊற்றி தேரோட்டம் நடந்து, பின்னர் கல்பாத்தி கிராமத்தில் ஒரே இடத்தில் சங்கமம் ஆனது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






