search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அர்த்தநாரீஸ்வர சக்தியாக கோனியம்மன்
    X

    அர்த்தநாரீஸ்வர சக்தியாக கோனியம்மன்

    • கோனியம்மனின் உருவ அமைப்பு வித்தியாசமான கோலத்துடன் உள்ளது.
    • கோனியம்மன் கழுத்தில் ஆரம் அணிந்துள்ளாள்.

    கோவை நகரில் ஆட்சி செய்யும் கோனியம்மன் கருவறையில் மிகவும் சிறப்பான கோலத்தில் காட்சி தருகிறார். 3½ அடி உயரம் உள்ள கோனியம்மன் விக்ரகம் 8 கரங்களுடன் காட்சியளிக்கிறது. அந்த 8 கரங்களிலும் சூலம், உடுக்கை, வாள், சங்கு, கபாலம், தீ, சக்கரம், மணி ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். அதோடு அவள் இடது காதில் தோடு அணிந்துள்ளாள். வலது காதில் குண்டலம் அணிந்துள்ளாள்.

    இந்த உருவ அமைப்பை அர்த்தநாரீஸ்வர சக்தியாக கருதுகிறார்கள். இடதுபாகம் அம்மையின் பாகம் என்பதால் தோடு காணப்படுகிறது. வலது பாகம் ஈசன் பாகம் என்பதால் குண்டலம் உள்ளது.ஒரு பாகம் ஈசன் அம்சமும், மற்றொரு பாகம் அம்பிகை அம்சத்துடன் உள்ளதால் கோனியம்மன் அர்த்தநாரீஸ்வர சக்தியாக திகழ் கிறாள்.

    இந்த வடிவம் சிவமும், சக்தியும் வேறு, வேறு இல்லை ஒன்றுதான் என்பதை பக்தர்களுக்கு உணர்த்துகிறது.

    கோனியம்மன் சிலை அமைப்பை கவனித்தால் அவள் வலது பாதத்தை மடித்து பீடத்தின் மீது வைத்திருப்பது தெரியும். இடது காலை கீழே தொங்க விட்டபடி அமர்ந்துள்ளாள். அவள் காலடியில் துஷ்ட அரக்கன் வீழ்ந்து கிடக்கிறான். மகிஷா சுரமர்த்தினி யுடன் போரிட வந்த அந்த அரக்கன் வாளுடன் கீழே விழுந்து கிடக்கிறான்.

    கோனியம்மன் கழுத்தில் ஆரம் அணிந்துள்ளாள். தலையை மணி மகுடம் அலங்கரித்துக் கொண்டி ருக் கிறது. இதனால் கோனியம்மனின் உருவ அமைப்பு வித்தியாசமான கோலத்துடன் உள்ளது. அவளது பார்வை மிகவும் உக்கிரமாக உள்ளது. என்றாலும் அவள் பக்தர்களை பார்க்கும்போது உக்கிரம் தணிந்து அருள் மழை தரும் குளிர்ச்சியான தென்றலாக வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×