என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்!
- பொதுவாக மாலை நேரத்தில் கொண்டாடப்படுகிறது.
- விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாகவும் கருதப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி ஆண்டு தோறும் தமிழ் ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் அன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழா ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி என்று பல்வேறு பெயர்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. இது விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாகவும் கருதப்படுகிறது.
இந்த விழா பொதுவாக மாலை நேரத்தில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால், பூஜைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன.
கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூஜையறை வரை இடப்பட்டு, குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.
மேலும் கிருஷ்ண ஜெயந்தி என்றாலே உறியடி விழா என்பது நினைவிற்கு வரும். இந்த விழாவிலே ஒரு உயரமான இடத்தில் பானையில் பல பரிசுப் பொருட்களை போட்டு கட்டி விடுவார்கள். இங்கு பானை என்பது பரம்பொருள்.
அது நமக்கு எட்ட முடியாத இடத்தில் இருக்கிறது. பரம்பொருளை நாடி அவருள் ஐக்கியமாகி முக்தி அடைய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணமாக இருக்கும்.
ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா? எத்தனை, எத்தனை அலைக்கழிப்புகளில் சிக்கி அல்லாட வேண்டியதிருக்கிறது. என்பதைக் குறிக்கும் வகையில் அந்த பானையை உடைத்து எடுப்பவரின் கண்களை கட்டி அவர் மேல் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பார்கள்.
இந்த தடைகளை எல்லாம் கடந்தால் தான் அந்தப் பரிசுப் பொருளைப் பெற முடியும். அது போல நாம் நமது வாழ்க்கையில் சந்திக்கும்பலவேறு தடைகளைக் கடந்து சென்றால் தான் பகவானின் திருப் பாதங்களில் தஞ்சம் அடைய முடியும்.
வீடுகளில் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டங்கள்
* வீடுகள் மற்றும் கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு மலர்கள், மாலைகள் மற்றும் அழகான ரங்கோலிகளால் அலங்கரிக்கப்படுகின்றன.
* வண்ணமயமான ஆடைகள் மற்றும் நகைகளால் அழகாக அலங்கரிக்கப்பட்ட குழந்தை கிருஷ்ணரின் சிலைகள் அல்லது உருவங்களுடன் சிறப்பு பீடங்கள் அமைக்கப்படுகின்றன.
* வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணரின் கால் தடங்களை அரிசி மாவில் இடுவார்கள். இது குழந்தை கிருஷ்ணர் வீட்டிற்கு வருவதாக ஐதீகம்.
* புதிதாக எடுக்கப்பட்ட வெண்ணெய், அவல் மற்றும் முறுக்கு சீடை போன்ற பலகாரங்களை செய்து நைவேத்தியம் செய்கிறார்கள்.
* பக்திப் பாடல்களைப் பாடுவது, பகவத் கீதையைப் படிப்பது மற்றும் கிருஷ்ணரின் குழந்தைப் பருவக் கதைகளைப் பாராயணம் செய்வது போன்றவை கடைபிடிக்கப்படுகிறது.
* வட இந்தியாவில், அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரம் முடியும் வரை பக்தர்கள் நிர்ஜல (நீர் கூட குடிக்காமல் இருத்தல்) விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள், சிலர் பழங்கள் மற்றும் சாத்வீக உணவுகளுடன் விரதத்தைத் தேர்வு செய்கிறார்கள்.
* உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களை சிறிய கிருஷ்ணராகவும் ராதையாகவும் அலங்காரம் செய்வது, பண்டிகை உற்சாகத்தை அதிகரிக்கும்.
அடுத்து, கிருஷ்ணரின் சிலை அல்லது விக்கிரகத்தை மலர்கள், விளக்குகள் மற்றும் தூபங்களால் அலங்கரித்து தெய்வீக சூழலை உருவாக்கி பூஜை அறையில் வைக்கவும்.
பாரம்பரிய இனிப்புகளான லட்டு, கேசரி மற்றும் பாயாசம் ஆகியவை பிரசாதமாக தயாரிக்கவும். வெண்ணெய் மற்றும் தயிர் சார்ந்த உணவுகள் போன்ற கிருஷ்ணருக்கு பிடித்த சில உணவுகளையும் படைக்கலாம்.
பகவான் கிருஷ்ணரை மந்திரங்கள் ஜெபித்து அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்களைப் பாடி வணங்குங்கள்.
நீங்கள் அனைவரும் இந்த மங்களகரமான விழாவைக் கொண்டாடி மகிழ எங்களின் அன்பான வாழ்த்துக்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்