search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

    • உற்சவர் ராமர், லட்சுமனர், சீதை, அனுமருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
    • விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் நேற்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவரான 11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் பருவமழையால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியும், டெல்டா மாவட்டங்களில் போதிய அளவு மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் பக்தர்கள் மகா சங்கல்பம் செய்து கொண்டனர்.

    உற்சவர் ராமர், லட்சுமனர், சீதை, அனுமருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் ராமன், மோகன் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×