search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஞானத்தின் அதிபதி தட்சிணாமூர்த்தி
    X

    ஞானத்தின் அதிபதி தட்சிணாமூர்த்தி

    • தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே ‘சின்முத்திரை’ என்பர்.
    • கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும்.

    * 'தட்சிணம்' என்ற சொல்லுக்கு 'தெற்கு' என்றும், 'ஞானம்' என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடு பவர்களுக்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தட்சிணாமூர்த்தி. ஞானமானது தட்சிணாமூர்த்தியின் முன்னிலையில் அவரையே நோக்கி நின்று கொண்டிருக்கிறது.

    * தட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோவில்களில் அருள்பவர் வியாக்யான தட்சிணாமூர்த்தியே ஆவார். வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார். வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்.

    * வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டை விரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே 'சின்முத்திரை' என்பார்கள். இதில் கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்.

    Next Story
    ×