search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மகரவிளக்கு பூஜை: திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது
    X

    மகரவிளக்கு பூஜை: திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது

    • நாளை மறுநாள் (14-ந்தேதி) மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
    • திருவாபரணத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது. அதிலி ருந்து தினமும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.

    மகரவிளக்கு பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்களின் வருகை அதிக மாக காணப்பட்டது. இந்த நிலையில் நாளை மறுநாள் (14-ந்தேதி) மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் தேவசம்போர்டு செய்து வருகிறது.

    மகரவிளக்கு பூஜையன்று பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் பம்பை, சபரிமலையில் கூடுதல் போலீசார் பணி யமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் இன்று முதல் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    மகரவிளக்கு பூஜை தினத்தில் மாலையில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளம் அரண்மனையில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது.

    வரும் இடங்களில் எல்லாம் திருவாபரணத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். திருவாபரண ஊர்வலம் நாளை மறுநாள் (14-ந்தேதி) பம்பைக்கு வந்து சேரும். அன்று மாலையில் பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

    அதன்பிறகு திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை முடிந்து பந்தள அரண்மனை பிரதிநிதி தரிசனம் செய்ததும் வருகிற 20-ந்தேதி காலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.

    Next Story
    ×