search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆலமூடு அம்மன் கோவிலில் பால் குடம், காவடியுடன் பக்தர்கள் ஊர்வலம்
    X

    பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

    ஆலமூடு அம்மன் கோவிலில் பால் குடம், காவடியுடன் பக்தர்கள் ஊர்வலம்

    • அம்மனுக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.
    • 41 நாட்கள் மாலை போட்டு விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.

    முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் பூக்குழி கொடைவிழா நேற்றுமுன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இரவு யானைகளுக்கு கஜபூஜையும், திருவிளக்குபூஜையும் நடந்தது.

    ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலில் இருந்து நேற்று காலையில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், யானைகள் முன்னே சென்றன. அதைத்தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், பூங்கரகம், முளைப்பாரியை சுமந்து வந்தனர்.

    அதன்பின்னால் அலகு குத்தி பறக்கும் காவடி, சூரிய காவடிகளை சுமந்தபடியும் பக்தர்கள் வந்தனர். இந்த ஊர்வலத்தை கோவில் நிர்வாக குழு தலைவர் அருணாசலம் தலைமையில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தொடங்கிவைத்தார். ஊர்வலம் வடக்கூர், சந்திப்பு, எம்.ஜி.ஆர். நகர், மருத்துவர் நகர், மூவேந்தர் நகர் வழியாக ஆலமுடு அம்மன் கோவிலை அடைந்தது.

    கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு அபிஷேகமும், தொடர்ந்து சாமிகளுக்கு பாயாச குளியலும், பின்னர் அலங்கார தீபாராதனையும் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழிநெடுகிலும் ஊர்வலத்தில் வந்த பக்தர்களுக்கு நீர், மோர், பழங்கள் வழங்கப்பட்டன. மாலையில் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வந்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து அம்மன் தேரில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு பூப்படைப்பும், அதனை தொடர்ந்து 41 நாட்கள் மாலை போட்டு விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.

    இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலையில் அம்மனுக்கு ஊட்டுபடைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழா ஏற்பாட்டை முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் இ.அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் சேவா சங்கத்தினர், விழா குழுவினர் செய்து இருந்தனர்

    Next Story
    ×