என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 19, 20-ந்தேதிகளில் நடக்கிறது
- ஆண்டுக்கு ஒரு முறை ஆகம சாஸ்திரப்படி பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
- 19-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.
திருப்பதி மாவட்டம் நாகலாபுரத்தில் உள்ள வேதவல்லி சமேத வேதநாராயணசாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள், திருவிழாக்கள் நடக்கின்றன. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக ஆண்டுக்கு ஒரு முறை ஆகம சாஸ்திரப்படி பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் வருகிற 19, 20-ந்தேதிகளில் நடக்கிறது. 19-ந்தேதி காலை ஆச்சார்ய ருத்விக் வாரணம், மாலை சேனாதிபதி உற்சவம், இரவு அங்குரார்ப்பணம் நடக்கிறது. 20-ந்தேதி காலை உற்சவர்களான வேதவல்லி சமேத வேதநாராயணசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், இளநீர், பன்னீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம், பவித்ர மாலைகள் சமர்ப்பணம் ஆகியவை நடக்கிறது. அதன் பிறகு இரவு பூர்ணாஹுதி நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.
ேமற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.