என் மலர்
வழிபாடு

நட்டாற்றீஸ்வரர் கோவிலில் காவிரி அம்மன் திருக்கல்யாண உற்சவம்
- விழவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் ஐப்பசி மாதம் 1-ம் தேதி குடகு மலையில் காவிரி அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். பின்னர் அங்கிருந்து தொடங்கி காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு ஐப்பசி மாதம் 30-ந் தேதி வரை காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் வரை நடைபெறும்.
அதன்படி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் மொடக்குறிச்சியை அடுத்த காங்கேயம்பாளையம் காவிரி ஆற்றின் நடுவில் அமைந்து உள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில் அகத்திய மகரிஷி லோபமித்ரா காவிரி அம்மன் உற்சவ சிலைக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் கோவில் செந்தில் குருக்கள், குகநாதன் குருக்கள் மற்றும் சிவாலய நல அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர், செயலாளர் காந்தி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






