search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    களைகட்டும் நவராத்திரி திருவிழா: வீடுகளை அலங்கரிக்கும் கொலு
    X

    களைகட்டும் நவராத்திரி திருவிழா: வீடுகளை அலங்கரிக்கும் கொலு

    • கொலு படிகளை ஒற்றைப்படையில் தான் வைக்க வேண்டும்.
    • கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது.

    நவராத்திரி என்றால் கொலு பொம்மை தான் முதலில் நமது நினைவிற்கு வரும். கொலுப் படிகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் வைக்க வேண்டும். எனவே கொலு படிகள் அமைக்கும் போது 3 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம். கொலு படிகள் அமைக்கும் போது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும்.

    கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது. மேலே உள்ள படியில் இறைவனின் பொம்மைகளை வைப்பார்கள். ஆதற்கு கீழே ரிஷிகள் முனிகள் சித்தர்கள் போன்ற பொம்மைகள், அதற்கு கீழே மனிதர்கள், பின் விலங்குகள்,பறவைகள், போன்றவற்றை வைப்பார்கள். அதாவது கொலு படிகளில் கீழிருந்து ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, ஐந்தறிவு, ஆறறிவு, ரிஷிகள், தெய்வங்கள் என்ற வரிசையில் பொம்மைகளை அடுக்கி வைத்து கொலுப் படிகளின் நடுவில் கலசம் வைப்பார்கள்.

    நவராத்திரி கொலுப் படியில் இருக்கும் கலசத்திற்கு தினமும் மஞ்சள், குங்குமம், அட்சதை மற்றும் பூக்கள் மற்றும் வஸ்திரம் சார்த்தி பூஜித்தி வருவார்கள். மாலையில் தினமும் சுண்டல் செய்து நிவேதனம் செய்து வீட்டில் கொலு பார்க்க வருபவர்களுக்கு வழங்க வேண்டும். பத்து நாட்கள் முடிந்த பிறகு கலசத்தில் வைத்த தேங்காயை வைத்து இனிப்பு பண்டங்களைச் செய்யலாம்.

    ஒரு சிலர் வீட்டில் பத்து நாட்களும் விளக்கு எரிய வைப்பார்கள். இதற்கு அகண்ட தீபம் என்று பொருள். இதில் மூன்று வித எண்ணெய் நல்லெண்ணெய், நெய் இலுப்பெண்ணெய்)அல்லது ஐந்து வித எண்ணெய் கலந்து தீபம் ஏற்றலாம்.

    கொலுப்படி மற்றும் பொம்மைகள் வைக்க இயலாதவர்கள் எளிமையாக வீட்டில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் படத்தை வைத்து அதற்கு முறையாக பூஜைகள், நைவேத்தியங்கள் படைத்து எளிய முறையில் வழிபடலாம்.

    நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் காலை மாலை என இரண்டு வேளை பூஜை செய்ய வேண்டும். அம்மன் பற்றிய பாடல்களை பாடுவார்கள். வீட்டிற்கு அக்கம் பக்கம், தெரிந்தவர்கள் மற்றும் விருந்தினர்களை அழைத்தது வெற்றிலை, பாக்கு, மஞ்சள் பழம், தட்சினை சுண்டல், மற்றும் நீங்கள் விரும்பினால் ஏதாவது பரிசுப்பொருட்கள அல்லது ரவிக்கை போன்றவற்றை அவரவர் தகுதி மற்றும் விருப்பத்திற்கேற்ப கொடுக்கலாம்.

    சிறு குழந்தைகள் வந்தால் அவர்கள் வயதிற்கேற்ற பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இந்த ஒன்பது நாட்களுள் ஏதாவது ஒரு நாள் ஒரு கன்னிப் பெண்ணை அழைத்து உணவளித்து வெற்றிலை, பாக்கு உடை எடுத்து அளிக்கலாம். இதனை செய்வது மிகவும் சிறப்பு.

    இத்தகைய சிறப்புமிக்க்க நவராத்திரி பண்டிகையையொட்டி சென்னை வடபழனியை சேர்ந்த பிரேமலதா-அரவிந்தன் தம்பதி லண்டனில் உள்ள தனது வீட்டில் கொலு வைத்துள்ளனர்.

    அதேபோன்று சென்னை தி.நகர் தண்டபாணி தெருவை சேர்ந்த சங்கர்-லட்சுமி தம்பதியினர் நவராத்திரி பண்டிகையை யொட்டி தங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளார்கள்.

    Next Story
    ×