search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வரலட்சுமி பூஜை ஏற்பாடு
    X

    வரலட்சுமி பூஜை ஏற்பாடு

    • வரலட்சுமி பூஜையை சுமங்கலிகள் செய்தால் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும்.
    • கன்னிப்பெண்கள் செய்தால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.

    வரலட்சுமி பூஜையை செய்யும் போது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்து, பூஜை அறையை நன்கு அலங்கரித்து, ஒரு பெரிய விசேஷம் போல் பெரும்பாலா னவர்கள் செய்வார்கள். இந்த பூஜையை விரதம் இருந்து, சுமங்கலிகள் செய்தால் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும். கன்னிப்பெண்கள் செய்தால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.

    வரலட்சுமி பூஜையின் முதல் நாள் வீட்டை நன்கு பெருக்கி, துடைத்து, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். மேலும் வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டின் தென் மேற்கு மூலையில் மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது பச்சரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைக்க வேண்டும்.

    மேலும் பழங்கள், இனிப்புகள் வாங்கி வைக்க வேண்டும். கலசம் செய்ய ஒரு சொம்பை எடுத்து, அதில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, தகரத்தால் வெள்ளி முலாம் பூசப்பட்ட அம்மன் முகத்தை, அந்த தேங்காயில் வைத்து பத்திரமாக கட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறு சேலைத்துணியை அந்த கலசத்தில், சேலையை கட்டுவது போல் கட்டிவிட வேண்டும். பின் அம்மனுக்கு வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் அழகான பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இப்போது கலசமானது தயாராகி விட்டது.

    பூஜை செய்யும் முன் கடவுளுக்கு நைவேத்தியம் செய்ய பால் பாயாசம் செய்து வைக்கலாம். பூஜையில் ஒன்பது முடிச்சுடைய மங்கள கரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட வேண்டும். பின்பு அந்த கயிற்றை வலது மணிக்கட்டில் கட்ட வேண்டும். அதிலும் விரதம் இருப்பவர்கள் அந்த தினத்தில் லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழி பாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    பின்பு சுமங்கலிப் பெண்களை அழைத்து, பூஜை முடிந்ததும், அவர்க ளுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு போன்ற தட்சணைகளைக் கொடுத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு பூஜை செய்தால் வீட்டில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    Next Story
    ×