என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
பத்மாவதி தாயார் கோவிலில் புதிய கொடிக்கம்பம் பிரதிஷ்டை
- மார்ச் 13-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
- கருடாழ்வார் கொடி கம்பம் நவதான்ய மற்றும் நவரத்னங்களுடன் நிறுவப்பட்டது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஜி.என். செட்டி சாலையில் புதிதாக பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு புதிய கொடிக்கம்பம் நிறுவும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான பஞ்ச ராத்ர ஆகம ஆலோசகர் சீனிவாசாச்சாரியுலு மேற்பார்வையில், விஸ்வக்சேன ஆராதனை, புண்யாஹவச்சனம், கும்ப ஆரத்தி நடந்தது.
கருடாழ்வார் கொடி கம்பம் நவ தான்ய மற்றும் நவ ரத்னங்களுடன் நிறுவப்பட்டது. மேலும் குபேர, கூர்ம, லட்சுமி யந்திரங்களும் நிறுவப்பட்டன. அடுத்த மாதம் (மார்ச்) 13-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் தொடங்கி நடக்கின்றன.
நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், சென்னை உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி, தேவஸ்தான என்ஜினீயர் நாகேஸ்வர ராவ், என்ஜினீயர்கள் சத்தியநாராயணா, மனோகரன், துணை அதிகாரிகள் குணபூஷன்ரெட்டி, சுப்பிரமணியம், செல்வம், பறக்கும் படை அதிகாரி மனோகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.