என் மலர்
வழிபாடு

பெரியபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றம் 25-ந்தேதி நடக்கிறது
- ஜூலை 5-ந்தேதி மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை சந்தனக்கூடு விழா ஊர்வலம் நடைபெறுகிறது.
- ஜூலை 5-ந்தேதி பிற்பகல் பகல்கூடு நடைபெற உள்ளது.
பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. 122-ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு விழாவையொட்டி வருகிற 25-ந்தேதி மாலை தர்கா வளாகத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் 5-ந்தேதி மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை சந்தனக்கூடு விழா மற்றும் ஊர்வலம் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் பகல்கூடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை சந்தனக்கூடு விழா கமிட்டியினர் அனைத்து சமுதாய மக்கள் செய்து வருகின்றனர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
Next Story






